காற்று வழிபோவதை நாற்று சொல்கின்றது..!

 
காற்று வழிபோவதை நாற்று சொல்கின்றது..!
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது..!
என் கண்ணில் வழிகின்ற கண்ணீர் உன் காதல் சொல்கின்றது..!
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் துளிர் உள்ளது..!
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது..!
என் பாதி உயிர் போன போதும் என் மீதி வாழ்வுள்ளது..